|
| 'நேபாளத்தில் பிரச்சண்டா தலைமையில் புதிய அரசு' |
| காத்மாண்டு (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2008 ( 17:11 IST ) | |
நேபாள அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் மாவோயிஸ்டுகள் கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், புதிய அரசை தாம் தலைமையேற்று வழிநடத்திச் செல்லவிருப்பதாக அக்கட்சியின் தலைவர் பிரச்சண்டா இன்று அறிவித்தார்.
காத்மாண்டில் நடத்தப்பட்ட பேரணியில் அவர் பேசுகையில், நேபாளத்தின் முதல் குடியரசு ஆட்சியில் தாம் தலைமையேற்கவுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 10-ம் தேதி நடந்த தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சியால் வருங்கால அதிபர் என்று பிரச்சண்டா முன்னிருத்தப்பட்டார். ஆனால், அவர் அதிபராவதற்கு இடைக்கால அரசியலமைப்பு வழிவகை செய்யாத நிலையில், பிரதமராக அவர் பதவியேற்பார் என்று கட்சி வட்டாரங்கள் கூறி வருகின்றன.
நேபாளத்தின் அரசியல் நிர்ணய சபைக்கான 240 தொகுதிகளுக்கான நேரடி தேர்தலில், மாவோயிஸ்டுகள் அதிகபட்சமாக 118 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 8 இடங்களில் நடைபெற்ற மறுதேர்தலுக்கான முடிவும் அறிவிக்கப்படாமல் உள்ளன.
அதேநேரத்தில், மொத்தமுள்ள 601 அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களில், முழு பெரும்பான்மையை மாவோயிஸ்டுகள் கைப்பற்றுவது சந்தேகமே. இதுவரை, விகிதாச்சார அடிப்படையில் 30 சதவிகித வாக்குகள் மட்டுமே மாவோயிஸ்டுகள் பெற்றிருப்பதும், 26 உறுப்பினர்களை பிரதமர் தேர்ந்தடுப்பார் என்பதுமே இதற்குக் காரணம்.
ஆயினும், நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆட்சியமைப்பது உறுதி என்ற நிலை உருவாகியிருக்கும் சூழலில், முதல் அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் நேபாளத்தைக் குடியரசு நாடாக அறிவிக்கவுள்ளதாக பிரச்சண்டா தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|