|
| பாகிஸ்தானில் தேவை ஏற்படின் பிரதமராவேன் : சர்தாரி |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2008 ( 15:34 IST ) | |
பாகிஸ்தானில் தேவை ஏற்படும் பட்சத்தில் தாம் பிரதமராகவுள்ளதாக ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவருமான ஆசிஃப் அலி சர்தாரி கூறினார்.
பிபிசி-க்கு இன்று பேட்டியளித்த அவர், சிந்து மாகாணத்திலுள்ள மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிரின் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தாமும், தம்முடைய சகோதிரி ஃபெர்யால் தல்புரும் போட்டியிடவுள்ளதாகவும், அதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்பது குறித்து உறுதியாக பதிலளிக்க மறுத்த சர்தாரி, தேவை எழுந்தால் அந்தப் பொறுப்பினை தாம் ஏற்றுக்கொள்வதாக கூறினார்.
பாகிஸ்தான் அதிபருடனான உறவு குறித்து அவர் கூறுகையில், முஷாரப் மீது விருப்பு - வெறுப்பற்ற நிலையே உள்ளதாக தெரிவித்தார்.
பிரதமர் பதவிக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் யூசுஃப் ராஸா கிலானியை பரிந்துரைத்த சர்தாரி, அந்தப் பதவியை தாம் வகிப்பது குறித்த திட்டம் இல்லை என்று கடந்த மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|