|
| தீவிரவாதிகள் - பழங்குடியினர் மோதல்: 20 பேர் பலி |
| இஸ்லாமாபாத்(ஏஜென்சி), வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2008 ( 15:28 IST ) | |
பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்பினருக்கும், பழங்குடியினருக்கும் இடையே நடந்த பயங்கரச் சண்டையில் 20 பேர் பலியாகினர்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கும், அங்கு வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.
இந்நிலையில், வடமேற்கு பகுதியில் உள்ள ஹைபர் ஏஜென்சி என்ற இடத்தில் வசித்து வரும் பழங்குடி இனத்தவருக்கும், அங்கு பதுங்கியுள்ள லஷ்கர்- இ- இஸ்லாம் அமைப்பு தீவிரவாதிகளுக்கும் இடையே, பரஸ்பரம் மற்றவர் இடத்தை ஆக்கிரமிப்பது தொடர்பாக மோதல் இருந்து வருகிறது.
இரு தரப்பினருக்கும் இடையே நேற்றிரவு பயங்கரச் சண்டை நடந்தது. இரு பிரிவினரும் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்கிக்கொண்டனர்.
இதில் சுமார் 20 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். அந்த பகுதியிலிருந்து இன்று மாலை 4 மணிக்குள் வெளியேறிவிட வேண்டும் என்று பழங்குடியின மக்களுக்கு தீவிரவாத அமைப்பின் தலைவர் மங்கள் பாக் அபிரிடி கெடு விதித்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|