|
| இந்தியா - பிரேசில் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து |
| பிரஸில்லியா(ஏஜென்சி), வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2008 ( 12:56 IST ) | |
இந்தியா - பிரேசில் இடையே குற்றவாளிகளை நாடு கடத்துவது உள்ளிட்ட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பிரேசில் பயணம் நேற்றுடன் முடிவடைந்தது.இந்நிலையில், கடைசி நாளான நேற்று இந்தியா - பிரேசில் இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாக்கியோ ஆகியோரது முன்னிலையில் இந்த ஒப்பப்ந்தங்கள் கையெழுத்தாகின.
குற்றவாளிகளை பரஸ்பரம் நாடு கடத்துவது, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறையில் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிப்பது , இரு நாடுகளிடையேயான உறவை மேலும் பலப்படுத்துவது நான்கு துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் இந்திய மரபுசாரா எரி சக்தி துறை இணையமைச்சர் விலாஸ் ராவ் முட்டேமர் ,அதே துறையின் பிரேசில் அமைச்சர் அமாரின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|