|
| ஹஜ் யாத்திரை செல்ல 1,57,000 பேருக்கு அனுமதி: இ.அஹமத் |
| துபாய் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2008 ( 12:47 IST ) | |
ஹஜ் புனித பயணத்துக்காக, இந்த ஆண்டு 1 லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு சவுதி அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அஹமது கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டைபோலவே, இந்த ஆண்டும் ஹஜ் புனித யாத்திரைக்காக 1 லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு சவுதி அரசு அனுமதி வழங்கியுள்ளது. கூடுதலாக 15 ஆயிரம் பேரை அனுமதிக்கும்படி கோரியுள்ளோம். அதற்கு ஒப்புதல் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இதில், ஹஜ் கமிட்டி மூலம் 1 லட்சத்து 10 ஆயிரம் பேரும், தனியார் சுற்றுலா ஏஜெண்டுகள் மூலம் மற்றவர்களும் வருவர்.
ஹஜ் பயணிகளுக்கு கடந்த ஆண்டுகளில் பல்வேறு வசதிக்குறைபாடுகள் ஏற்பட்டதாக புகார் எழுந்தது. அந்த குறைபாடுகள் நீக்கப்பட்டு, இந்த ஆண்டு சிறப்பான வசதிகள் செய்து தரப்படும்.
ஹஜ் கமிட்டி மூலம் வருபவர்கள், சொந்த ஊர் திரும்பும்போது 10 லிட்டர் கேன்களில் புனித நீர் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|