யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
மலேசியாவில் தமிழ் நாளிதழுக்கு அரசு தடை!
கோலாலம்பூர் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2008   ( 12:43 IST )
மலேசியாவில் இந்திய வம்சாவளியினருக்கு எதிரான அடக்கு முறையை கண்டித்து வந்த தமிழ் நாளிதழுக்கு அரசு தடை விதித்துள்ளது.

மலேசியாவில் 'மக்கள் ஓசை' என்ற தமிழ் நாளிதழ், கடந்த 27 ஆண்டுகளாக வெளியாகி வருகிறது. இந்திய வம்சாவளியினர் மீதான மலேசிய அரசின் தாக்குதல்களை இந்த பத்திரிகை தொடர்ந்து கண்டித்து வந்தது.

சமீபத்தில், இது தொடர்பாக தலையங்கம் ஒன்றையும் வெளியிட்டது. இதில், அரசின் பாரபட்சமான நடவடிக்கைகளை விமர்சித்திருந்தது.

இது மலேசிய உள்துறை அமைச்சகத்துக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, 'மக்கள் ஓசை' நாளிதழுக்கு தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக, அந்த பத்திரிகையின் ஒட்டுமொத்த பதிப்புகளும் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளன. அதில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்த பத்திரிகையின் ஆசிரியர் ராஜன் கூறுகையில், "ஒரு பத்திரியாளர்களாக எங்களது கடமையை செய்தோம். நாட்டில் நடக்கும் சம்பவங்களைதான் மக்களுக்கு கொண்டு சென்றோம். ஆனால், விதிமுறைகளை நாங்கள் மீறிவிட்டதாக குற்றம்சாட்டி எங்கள் பத்திரிகையை நிறுத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கோரிக்கை விடுக்கவுள்ளோம்" என்றார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நேபாளம் : வரலாற்று வெற்றி பெற்ற பிரச்சண்டா 'பிஸி'!
இந்தியா மீது விடுதலைப் புலிகள் கடும் சாடல்
பங்காளதேஷில் பேருந்து மீது ரயில் மோதி 17 பேர் பலி
பாக் : பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு மீண்டும் பணி
காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப தீர்வு : பாக். பிரதமர்
இஸ்ரேலை அழித்து விடுவோம் : ஈரான் எச்சரிக்கை
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...