|
| நேபாளம் : வரலாற்று வெற்றி பெற்ற பிரச்சண்டா 'பிஸி'! |
| காத்மாண்டு (ஏஜென்சி), 16 ஏப்ரல் 2008 ( 12:45 IST ) | |
நேபாளத் தேர்தலில் மாபெரும் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்று, 240 ஆண்டுகால மன்னராட்சிக்கு முடிவு கட்டியுள்ள மாவோயிஸ்டுகளின் தலைவர் பிரச்சண்டா, ஊடகங்களுக்குக் கூட பேட்டியளிக்க நேரமின்றி பரபரப்புடன் இயங்கி வருகிறார்.
புஷ்ப கமல் தஹால் என்ற இயற்பெயர் கொண்ட அவர், காத்மாண்டு -10, ரோப்லா - 2 தொகுதிகளில் வெற்றி பெற்றவுடன், செய்தியாளர்களுக்குப் உற்சாகமாக பேட்டியளித்தார். அதன்பிறகு, ஊடகங்கள் அவரை நெருங்க முடியாத அளவில் காணப்படுகிறார்.
மாவோயிஸ்டுகளின் தலைவருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்கே டஜன் கணக்கில் தலைவர்கள் பலர் வரிசையில் காத்துக்கிடப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரச்சாண்டாவை அவரது இல்லத்தில் சந்தித்த இந்தியத் தூதர் சிவ சங்கர் முகர்ஜி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
முன்னதாக, மனித உரிமைகள் ஆர்வலர்கள் மற்றும் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா ஆகியோரைச் சந்தித்த பிரச்சண்டா, வரலாற்று சிறப்புமிக்க தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு தனது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|