யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
இந்தியா மீது விடுதலைப் புலிகள் கடும் சாடல்
கொழும்பு(ஏஜென்சி), புதன்கிழமை, 16 ஏப்ரல் 2008   ( 12:45 IST )
தமிழினத்தைப் பூண்டோடு அழிப்பதற்காபோரிட்டுவரும் சிங்களத் தளபதிகளுக்கு ந்தியா சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பதாக குற்றம் சாட்டியுள்ள விடுதலைப் புலிகள் இயக்கம் , இதனை உலக நாடுகள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றன எனக் கூறியுள்ளது.

இது தொடர்பாக புலிகள் ஆதரவு பத்திரிகை ஒன்றில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது :

தமிழரின் தேசிய இனப் பிரச்னைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வுகாண சிங்கள அரசு விரும்பவில்லை என்ற உண்மையையும், ராணுவத்தீர்வு மூலம் தமிழினத்தை அடிமைப்படுத்த அது முயல்கின்றது என்ற எதார்த்தத்தையும் இப்போது, உலக நாடுகளுக்குப் புரியத் தொடங்கியுள்ளது.

போரில் சிங்களப்படைகள் இழப்புகளையும் பின்னடைவுகளையும் சந்திக்கும் போதெல்லாம், சிங்களத் தளபதிகள் பதறியடித்து இந்தியாவுக்குச் சென்று அங்குள்ள ஆட்சியாளர்களையும், இந்திய ராணுவத் தளபதிகளையும் கலந்து ஆலோசிப்பது வழக்கமாகிவிட்டது.

தமிழினத்தைப் பூண்டோடு அழிப்பதற்காக போரிட்டுவரும் சிங்களத் தளபதிகளுக்கு இந்தியா சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பதை உலக நாடுகள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

'இலங்கைக்கு வேற்று நாடுகளின் ஆயுதங்களால் இந்தியாவுக்கு ஆபத்து' என்ற இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகரின் கருத்தும், 'சிங்களப் படைகள் சோர்ந்து போவதை இந்தியா விரும்பவில்லை' என்ற இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளரின் பேச்சும், சிங்கள அரசுக்கு ராணுவ உதவிகளை வழங்கிவரும் இந்திய அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதாக உள்ளன.

சிங்கள அரசின் போருக்கு ஆதரவு அளிப்பதோடு, அதன் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் நிலப்பகுதிகளில் வர்த்தக லாபத்தை ஈட்ட முயலுவது இந்திய அரசின் சிறுமைத்தனத்தை காட்டுகிறது.

சிங்கள அரசின் நில ஆக்கிரமிப்புக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் ஓர் அரசியல் நடவடிக்கையாகவே இந்திய அரசின் இந்த வாணிப முயற்சிகள் அமைந்திருக்கின்றன.

இவ்வாறு, தமிழினப் படுகொலை செய்துவரும் சிங்கள அரசுக்கு பல்வேறு உதவிகளை இந்திய அரசு வழங்கிவருகிறது.

எனவேதான், இந்திய அரசின் அனைத்து வகை ஆதரவுடனும் சிங்கள அரசு செய்யும் தமிழ் இனப் படுகொலைக்கு இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று புலிகள் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது.

இந்த நிலையில் "இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும்- தமிழரின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே காணப்படவேண்டும்" என்று இந்திய அரசு விடுக்கும் அறிக்கைகளை வெறும் வாய்ச்சொற்களாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பங்காளதேஷில் பேருந்து மீது ரயில் மோதி 17 பேர் பலி
பாக் : பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு மீண்டும் பணி
காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப தீர்வு : பாக். பிரதமர்
இஸ்ரேலை அழித்து விடுவோம் : ஈரான் எச்சரிக்கை
ஈராக்கில் கார் குண்டு வெடிப்பில் 35 பேர் பலி
பெனாசிர் கொலை குறித்து ஐ.நா. விசாரணை கோரி தீர்மானம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...