|
| நேபாளம் : மாவோயிஸ்ட் தொடர்ந்து முன்னிலை |
| காத்மாண்டு(ஏஜென்சி), திங்கள்கிழமை, 14 ஏப்ரல் 2008 ( 15:56 IST ) | |
நேபாள நாட்டில் அரசியல் நிர்ணய சபைக்கு நடைபெற்ற தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
மொத்தம் 240 தொகுதிகள் கொண்ட நேபாள அரசியல் நிர்ணய சபைக்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை துவங்கி நேற்று காலை முதலே முடிவுகள் வெளிவரத் துவங்கின.
துவக்கம் முதலே மாவோயிஸ்ட் வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்து வந்தனர்.இந்நிலையில், இன்று காலை வரை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள 162 இடங்களில் 89 இடங்களை மாவோயிஸ்ட் கட்சி பிடித்துள்ளது.
ஆளும் நேபாள காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும், சிபிஎன்யுஎம்எல் கட்சிக்கு 23 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
மன்னராட்சிக்கு எதிராக ஆயுதமேந்தி போராடி வந்த மாவோயிஸ்ட்கள் இந்தத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட நிலையிலேயே அதிக இடங்களை கைப்பற்றியுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|