|
| ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கக்கூடாது: தலாய் லாமா |
| சியாட்டில் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2008 ( 12:34 IST ) | |
திபெத் பிரச்சனை எதிரொலியாக ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கக்கூடாது என்று புத்தமத தலைவர் தலாய் லாமா கோரிக்கை விடுத்துள்ளார்.
திபெத் பிரச்சனையில் சீனாவின் நடவடிக்கையை கண்டித்து அந்நாட்டில், ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவை புறக்கணிக்கப்போவதாக பிரான்ஸ் நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோசி உள்பட சில ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் அறிவித்தனர். இந்நிலையில், 13 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா வந்துள்ள தலாய் லாமா, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி:
திபெத்திய போராட்டத்துக்காக ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கக் கூடாது. நாங்கள் அதை விரும்பவில்லை. ஆனால் மற்ற நாடுகள் ஒலிம்பிக் போட்டி தொடக்கவிழாவை புறக்கணிப்பது அவர்களுடைய விருப்பம்.
இது வெறும் திபெத்திய பிரச்சினை மட்டுமல்ல. சீனாவின் மோசமான மனித உரிமை சம்பந்தப்பட்ட விஷயமும் கூட. சீனாவில் திபெத்தியர்களுக்கு சுதந்திரமே இல்லை.
நாங்கள் சீனாவுக்கு எதிரானவர்கள் அல்ல; தனி நாடும் கேட்கவில்லை. உரிய சுதந்திரம் கேட்டுதான் போராடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|