|
| இலங்கை ராணுவம் தாக்குதல் ; தமிழ் எம்.பி.படுகொலை |
| கிளிநொச்சி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 6 மார்ச் 2008 ( 18:07 IST ) | |
இலங்கை ராணுவம் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி. கி.சிவநேசன் கொல்லப்பட்டார்.
இன்று இலங்கை பாராளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற சிவநேசன், கொழும்பிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார்.மதியம் 1.20 மணியளவில் வன்னி கனகராயன்குளம் பகுதியில் இலங்கை ராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினர் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் சிவநேசன், அவரது ஓட்டுநர் ஆகியோர் உயிரிழந்ததாக புலிகள் ஆதரவு இணையதளமான ' புதினம் ' செய்தி வெளியிட்டுள்ளது.
பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க சென்ற தம்மை ஏற்கனவே சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தி இலங்கை ராணுவம் மிரட்டியிருந்ததாக கடந்த பிப்ரவரி 21 ம் தேதியன்று சிவநேசன், பாராளுமன்றத்தில் புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தூண்டில் | | தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்... |
| |
|
|
|
|
|
|
|