யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஓஹியோவில் ஹிலாரி வெற்றி; ஓபாமாவுடன் கடும்போட்டி நீடிப்பு
வாஷிங்ட்ன் (ஏஜென்சி), புதன்கிழமை, 5 மார்ச் 2008   ( 12:08 IST )
அமெரிக்க அதிபர் தவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்தலில், மிக முக்கியமாக கருதப்படும் ஓஹியோ உள்ளிட்ட மூன்று மாகாணங்களில் ஜனநாயக கட்சியின் ஹிலாரி வெற்றி பெற்றார். இதன்மூலம் பராக் ஒபாமாவின் தொடர்ச்சியான வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

டெக்சாஸ், ஓஹியோ மற்றும் ரோடி தீவு ஆகிய மாகாணங்களில் ஹிலாரி கிளின்டன் வெற்றி பெற்றுள்ள நிலையில், வெர்மோன்ட் மாகாணத்தில் மட்டுமே ஒபாமா வெற்றி பெற்றார்.

அதேநேரத்தில், ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடப் போகும் வேட்பாளர் யார் என்பதில் மேலும் குழப்பம் நீடித்து வருகிறது.

இதற்கு, இதுவரை நடந்து முடிந்த கட்சித் தேர்தல்களில் ஹிலாரி மற்றும் ஒபாமா ஆகிய இருவருக்கும் குறிப்பிடத்தக்க வாக்கு வித்தியாசம் இல்லை என்பதே காரணம்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளாராக போட்டியிடுவதற்கு, அக்கட்சியைச் சேர்ந்த 2,025 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை.

இந்நிலையில், இதுவரை நடந்து முடிந்த கட்சித் தேர்தல்களில், 24 மாகாணங்களில் வெற்றி பெற்ற ஒபாமா, 1,443 பிரதிநிதிகளின் ஆதரவினை தன்னகத்தே கொண்டுள்ளார்; அவரைக் காட்டிலும் சற்று பின்தங்கியுள்ள ஹிலாரிக்கு 1,351 பிரதிநிதிகளின் ஆதரவு கிடைத்துள்ளது.

தற்போது மூன்று மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ள ஹிலாரி, 'நாம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம்; வலுவான நிலையில் சென்று கொண்டிருக்கிறோம்' என்று ஓஹியோவில் தனது ஆதரவாளர்களிடம் நம்பிக்கையூட்டும் விதமாக பேசினார்.

இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சியின் வேட்பாளராக ஜான் மெக்கைன்தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கட்சியைச் சேர்ந்த 1,191 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்ற நிலையில், 20 மாகாணங்களில் வெற்றி பெற்ற அவர், 1,215 பிரதிநிதிகளின் ஆதரவுடன் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.





(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
யு.எஸ். அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளரானார் மெக்கைன்
லாகூரில் தற்கொலை தாக்குதல் ; 7 பேர் பலி
முஷாரப் ராஜினாமாவா ? பாகிஸ்தானில் பரபரப்பு
பாகிஸ்தான் வன்முறை : அமெரிக்கா கவலை
புலிகளுடன் போர் நிறுத்தம் இல்லை : ராஜ பக்சே
ரஷ்ய அதிபர் தேர்தலில் திமித்ரி வெற்றி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
அ‌ஞ்சாதே
'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்...
நெஞ்சத்தைக் கிள்ளாதே
சாது மிரண்டா...
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace