|
| யு.எஸ். அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளரானார் மெக்கைன் |
| டெக்சாஸ் (ஏஜென்சி), 5 மார்ச் 2008 ( 11:23 IST ) | |
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சியின் வேட்பாளராக ஜான் மெக்கைன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், ஓஹியோ, வெர்மோன்ட், ரோடி தீவு மற்றும் டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் இவர் அமோக வெற்றி பெற்றார்.
அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளாராக போட்டியிடுவதற்கு, அக்கட்சியைச் சேர்ந்த 1,191 பிரதிநிதிகளின் ஆதரவு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 20 மாகாணங்களில் வெற்றி பெற்ற மெக்கைன், 1,215 பிரதிநிதிகளின் ஆதரவுடன் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவருக்குப் போட்டியாக கருதப்பட்ட மிட் ரூம்னி, அதிபர் தேர்தலில் போட்டியிடும் முடிவைக் கைவிட்டதுடன், மெக்கைனுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | அஞ்சாதே | | 'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை... |
| |
|
|
|
|
|
|
|