யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
முஷாரப் ராஜினாமாவா ? பாகிஸ்தானில் பரபரப்பு
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 4 மார்ச் 2008   ( 13:22 IST )
பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து பர்வேஸ் முஷாரப் இன்னும் 2 நாளில் ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியான தகவல் காரணமாக அந்நாட்டில் ரபரப்பு ஏற்பட்டது.

பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முஷாரப் ஆதரவு கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து அவருக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருமின்றன.

தேர்தலில் அதிக இடங்களை பிடித்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீப் கட்சியும் ஆட்சியமைத்த பிற்கு முஷாரப்பை பதவி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிபர் முஷாரப்பை பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அஷஃபக் கயானி சந்தித்துப் பேசியதாகவும் , அப்போது அதிபர் பதவியிலிருந்து விலகுமாறு அவர் கேட்டுக்கொண்டதாகவும், இதனையடுத்து இன்னும் இரண்டு மூன்று நாளில் அதிபர் பதவியிலிருந்து விலக முஷாரப் ஒப்புக்கொண்டதாகவும் இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த தனியார் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது.

இத்தகவல அனைத்து ஊடகங்களுக்கும் பரவியதையடுத்து பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் , இச்செய்திக்கு பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இச்செய்தியில் துளியு உண்மையில்லை என ராணுவ செய்தி தொடர்பாளர் அத்தார் அப்பாஸ் தெரிவித்தார்.

அதேபோன்று அதிபர் முஷாரப்பின் செய்தி தொடர்பாளர் ரஷித் குரேசியும் இச்செய்தியை மறுத்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாகிஸ்தான் வன்முறை : அமெரிக்கா கவலை
புலிகளுடன் போர் நிறுத்தம் இல்லை : ராஜ பக்சே
ரஷ்ய அதிபர் தேர்தலில் திமித்ரி வெற்றி
'பாக்.கில் நிலவும் குழப்பத்திற்கு அமெரிக்கா , இந்தியா காரணம்'
காஸாவில் தாக்குதல் : யுனிசெஃப் கவலை
பாக். பழங்குடியினர் பகுதியில் தற்கொலைத் தாக்குதல் : 40 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
அ‌ஞ்சாதே
'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்...
நெஞ்சத்தைக் கிள்ளாதே
சாது மிரண்டா...
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace