|
| பாக். பழங்குடியினர் பகுதியில் தற்கொலைத் தாக்குதல் : 40 பேர் பலி |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), 2 மார்ச் 2008 ( 14:29 IST ) | |
வடமேற்கு பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் தர்ரா அதாம் கெல் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 பேர் பலியாயினர்.
அப்பகுதி பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பழங்குடியினர்களின் ஐந்து முக்கியத் தலைவர்கள் தலைமையில் மேற்கொண்ட ஜிர்கா எனப்படும் ஆலோசனைக் கூட்டத்தில், இந்தத் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில், பழங்குடி மக்களின் தலைவர்கள் பலரும் உயிரிழந்ததாக, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தலைவர்களில் இருவர், கடந்த மாதம் 18-ம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டம் நடந்துகொண்டிருந்த இடத்துக்கு நுழைந்த தற்கொலைத் தீவிரவாதி, தன்னிடம் இருந்த சக்தி வாய்ந்த குண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியிருப்பது தெரியவந்துள்ள நிலையில், இச்சம்பவத்துக்கு எந்தத் தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இச்சம்பவத்தில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு அருகிலுள்ள நகர்புறங்களில் இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், சம்பவம் நடந்த பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் ராணுவப் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப் பகுதிகளில் நடக்கும் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு, தாலிபான் ஆதரவு தீவிரவாதிகளே காரணம் என்று அந்நாட்டு அரசு குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | அஞ்சாதே | | 'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை... |
| |
|
|
|
|
|
|
|