|
| ஈழத்தையும் தனி தேசமாக அங்கீகரிக்க புலிகள் கோரிக்கை |
| வவுனியா(ஏஜென்சி), 1 மார்ச் 2008 ( 18:34 IST ) | |
கொசாவோ போன்று ஈழத்தையும் தனி தேசமாக அங்கீகரிக்க வேண்டும் உலக நாடுகளுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த இயக்கத்தின் அதிகாரப்பூர்வ ஏடான ' விடுதலைப் புலிகள் ' தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவ்து :
உலக வரைபடத்தில், புதிய தேசம் ஒன்று உருவாகி விட்டது.கொசோவோ என்ற அந்த இளைய தேசம் சுதந்திரப் பிரகடனம் செய்து தன்னை இறைமை உள்ள தனிநாடாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
கொசோவோவின் விடுதலைப் பிரகடனத்தை உலகின் பல நாடுகள் வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளன.புலிகள் இயக்கமும் அந்தப் புதிய தேசத்தை வாழ்த்தி வரவேற்கின்றது.
ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் தேசிய இனங்களுக்கு இந்தப் புதிய அரசின் பிறப்பு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வழங்கியுள்ளன.
செர்பிய அரசினதும்-அதன் படைகளினதும் இன அழிப்பிற்கு எதிராக போராடிய கொசோவோ மக்கள் இப்போது சுதந்திரமான கௌரவமான நிம்மதியான வாழ்க்கையைப் பெற்று விட்டார்கள்.
ஆனால், கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தை எதிர்ப்பதில் செர்பிய அரசுடன், இலங்கை அரசும் இணைந்து கொண்டது.
"உலக சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிக்கும் செயல்" என்று அந்த சுதந்திரப் பிரகடனத்தை வர்ணித்துள்ள இலங்கை அரசின் கருத்து பிற்போக்குத்தனமானது. வஞ்சக நோக்கம் கொண்டது.
விடுதலை கோரிப் போராடிக் கொண்டிருக்கும் தேசிய இனங்களின் சுதந்திர தாகத்தை உலகம் அங்கீகரித்து அவை புதிய தேசங்களாக பரிணமிக்க உதவி வருகின்றன என்பது உண்மையாகும்.
இந்த உண்மையின் ஆதாரங்களாக மான்டிநீக்ரோ, கொசாவோ, கிழக்கு தைமூர் போன்ற தேசங்கள் மாறிவிட்டன.இன்னும் சில தேசிய இனங்கள் விடுதலையின் வாசலில் நிற்கின்றன.
சமாதானத்தை விரும்பும் உலக நாடுகளின் எச்சரிக்கைகளையும் - சர்வதேச மனித உரிமை அமைப்புக்களது கண்டனங்களையும் உதாசீனம் செய்தபடி சிங்கள அரசு- தமிழ் இன அழிப்பைத் தொடர்கின்றது.
இந்த அடக்குமுறைக்கு எதிராக சாத்தியமான அனைத்து வழிமுறைகளிலும் தமிழினம் போராடி வருகின்றது.
எனவே, மான்டிநீக்ரோ, கொசாவோ, கிழக்கு தைமூர் ஆகிய தேசிய இனங்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரித்து ஆதரவு வழங்கியது போல தமிழரின் தன்னாட்சி உரிமையையும் அங்கீகரித்து ஆதரவு வழங்க உலகம் முன்வர வேண்டும் என்று தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்தைக் கோருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | அஞ்சாதே | | 'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை... |
| |
|
|
|
|
|
|
|