|
| பாக்.புதிய பிரதமர் மார்ச் 12 ல் பதவியேற்பு ? |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), சனிக்கிழமை, 1 மார்ச் 2008 ( 12:10 IST ) | |
பாகிஸ்தான் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுபவர் வருகிற 12 முதல் 15 ம் தேதிக்குள் பதவியேற்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களும், அதனைத் தொடர்ந்து சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோர் பதவியேற்றுக் கொண்ட பின்னர் புதிய பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சி வருகிற 12 முதல் 15 ம் தேதிக்குள் நடைபெறும்.
இத்தகவலை பாகிஸ்தானின் தற்போதைய இடைக்கால அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஏ.மேமன் தெரிவித்தார்.
இதனிடயே பாராளுமன்ற புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு வருகிற 5 ம் தேதியன்றும், 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோர் பதவியேற்பார்கள் என இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | அஞ்சாதே | | 'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை... |
| |
|
|
|
|
|
|
|