|
| பாக்.கில் தற்கொலை தாக்குதலில் 38 பேர் பலி |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), சனிக்கிழமை, 1 மார்ச் 2008 ( 11:35 IST ) | |
பாகிஸ்தானில் போலீஸ் உயரதிகாரி ஒருவரது இறுதி ஊர்வலத்தில் நடந்த தற்கொலை தாக்குதலில் 38 பேர் பலியாயினர்.
வட மேற்கு பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நேற்று காலை நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் துணை போலீஸ் கண்காணிப்பாளர் ஜாவேத் இக்பால் மற்றும் 3 போலீஸார் உயிரிழந்தனர்.
இந்நிலையில் குண்டு வெடிப்பில் உயிரிழந்த துணை போலீஸ் கண்காணிப்பாளர் ஜாவேத்தின் இறுதி சடங்கு ஸ்வாத் மாவட்டத்தில் உள்ள மிங்கோரா என்ற இடத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சக போலீஸார் உள்ளிட்ட ஏராளமானோர், பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் ஊடுருவிய மனித வெடி குண்டு தீவிரவாதி ஒருவன்,தான் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில், அங்கு நின்று கொண்டிருந்த 38 பேர் உடல் சிதறி பலியானார்கள் ; மேலும் 50 பேர் படு காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸார் ஆவர்.படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் பெரும்பாலானோரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து ஸ்வாத் மாவட்டம் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : வாரத்தின் முற்பகுதி கொஞ்சம் அலைச்சல் இருக்கும். சேமிப்பு கரையும்.
மாணவர்களின் நினைவாற்றல் பெருகும்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | சாது மிரண்டா... | | மனதில் ஆக்ரோஷத்தை வைத்துக்கொண்டு அப்பாவியான சாதுவாக மிரட்டிப் பழிவாங்குவதே படத்தின் மையக்கரு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நெஞ்செரிச்சலால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக கார வகை உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம்... |
| |
|
|
|
|
|
|
|