|
| பாகிஸ்தான் தூதரக அதிகாரி கடத்தல் |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 12 பிப்ரவரி 2008 ( 10:27 IST ) | |
ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரி திடீரென காணாமல் போன்தால் அவர் கடத்தபட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தானுக்கானுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரியாக இருப்பவர் தாரிக் அஸிஸுதீன்.இவர் நேற்று பாகிஸ்தானுக்கு வந்து விட்டு மீண்டும் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
ஆப்கான் எல்லையையொட்டிய வட மேற்கு பாகிஸ்தானில் உள்ள பழங்குடியினத்தவர்கள் வசிக்கும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவர் காணாமல் போனதாகவும், அவரை தீவிரவாதிகள் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அந்த அதிகாரி நேற்று காலை 11 மணியளவில் பெஷாவரிலிருந்து பேசினார் என்றும், அதன் பின்னர்தான் அவர் காணாமல் போய்விட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை... |
| |
|
|
|
|
|
|
|