|
| போராளிகளால் சுடப்பட்ட கிழக்கு தைமூர் அதிபர் கவலைக்கிடம் |
| மெல்போர்ன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 11 பிப்ரவரி 2008 ( 18:21 IST ) | |
போராளிகளால் இன்று சுடப்பட்ட கிழக்கு தைமூர் அதிபர் ஜோஸ் ஹார்டா கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அவருக்கு ஆஸ்திரேலியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தோனேஷியா அருகே உள்ள கிழக்கு தைமூர் கடந்த 2002-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. இதன் அதிபராக ஜோஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட ரமோஸ் ஹார்டாவுக்கு எதிராக போராளிகள் குழு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இக்குழுவை சேர்ந்த ரெய்னாடோ என்பவர் தலைமையில் மூன்று பேர் இன்று காலை அதிபரை கொல்ல முயன்றனர். கார்களில் வந்த அவர், அதிபரின் வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதிபரின் பாதுகாவலர் அவர்களை நோக்கி பதிலுக்கு சுட்டனர். இந்த மோதலில் ரெய்னாடோ கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில், அதிபர் ஜோஸ் ஹார்டாவின் வயிற்றில் குண்டுகள் பதிந்துள்ளது தெரிய வந்த நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை... |
| |
|
|
|
|
|
|
|