|
| பஹ்ரைன் : விபத்தில் இந்திய தொழிலாளி பலி |
| துபாய் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 11 பிப்ரவரி 2008 ( 15:10 IST ) | |
பஹ்ரைனில் நடந்த விபத்து ஒன்றில், இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் பலியானார். மேலும், இருவர் பலத்த காயமடைந்தனர்.
போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இம்மூவர் மீது நேற்று கிரேன் ஒன்று விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
இதில், கே.வி.அபுபெக்கர் (வயது 59) என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; கஞ்சிரப்பரம்பில் உன்னிகிருஷ்ணன் (39) மற்றும் அய்யமுக்கில் முகமது (43) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
காயமடைந்த இருவரின் உடல்நிலை, தற்போது சீராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் பலியானவரும், மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையுமான அபுபெக்கர், பஹ்ரைனில் கடந்த 24 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தவர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை... |
| |
|
|
|
|
|
|
|