|
| முஷாரப்பை எதிர்த்து பாக். வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம் |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 11 பிப்ரவரி 2008 ( 13:47 IST ) | |
பாகிஸ்தானில் அவசரநிலை அறிவிக்கப்பட்டபோது, முஷாரப்பால் நீக்கப்பட்ட தலைமை நீதிபதியை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை, அந்நாட்டு வழக்கறிஞர்கள் இன்று தொடங்கினர்.
பாகிஸ்தான் பார் கவுன்சிலால் அழைப்பு விடுக்கப்பட்ட இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில், நாட்டின் முக்கிய வழக்கறிஞர் சங்கங்களும் ஈடுபட்டுள்ளன.
தலைமை நீதிபதியை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதை கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து வலியுறுத்தி வருவதாக பார் கவுன்சிலின் நிர்வாகக் குழுவின் தலைவர் குவாசி முகமது அன்வர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதியன்று பாகிஸ்தானில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இஃப்திகார் முகமது சவுத்திரி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை... |
| |
|
|
|
|
|
|
|