|
| டர்பனில் சீக்கிய சிறுவனை பள்ளியில் சேர்க்க மறுப்பு |
| டர்பன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 11 பிப்ரவரி 2008 ( 12:20 IST ) | |
டர்பனில் தலைப்பாகை அணிந்த சீக்கிய சிறுவனை சேர்க்க, அங்குள்ள இரண்டு பள்ளிகளில் அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது
கடந்த மாதம், டர்பனில் சீக்கிய பெண் ஒருவர் தனது மகனை பள்ளியில் சேர்க்க கோரி அங்குள்ள டர்பன் ஹைஸ்கூல் மற்றும் க்ளென்வுட் ஹைஸ்கூல் ஆகிய இரண்டு பள்ளிகளை அணுகியுள்ளார்.
ஆனால் இரண்டு பள்ளிகளிலுமே அச்சிறுவன் நீண்ட தலைமுடிவைத்து அதனை முடிச்சுபோட்டு டர்பனால் கட்டியிருப்பதை காரணம் காட்டி பள்ளியில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டதாக அச்சிறுவனின் தாயார் புகார் கூறியுள்ளார்.
இது தொடர்பான செய்தி டர்பனிலிருந்து வெளியாகும் ' சண்டே டைம்ஸ் ' பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இது மிகவும் தீவிரமான பிரச்சனை என்றும், இது குறித்து விசாரிக்கப்படும் என்றும் அப்பள்ளிகள் அமைந்திருக்கும் மாகாணத்தின் கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை... |
| |
|
|
|
|
|
|
|