|
| இந்திய மீனவர்கள் 11 பேர் பாக்.கில் கைது |
| கராச்சி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 11 பிப்ரவரி 2008 ( 11:39 IST ) | |
தங்களது கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்ததாக இந்திய மீனவர்கள் 11 பேரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது.
அரபிக்கடலில் கராச்சிக்கு அருகே பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதியில், இந்த மீனவர்கள் நேற்று மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அவர்களை பாகிஸ்தான் கடற் பாதுகாப்பு படை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தது.
அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை உயரதிகாரி கமரான் அப்சல் தெரிவித்தார்.
பல முறை எச்சரித்தும் இருநாடுகளைச் சேர்ந்த மீனவர்களுமே இவ்வாறு அடிக்கடி கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டதாக பாகிஸ்தான் கடற் பாதுகாப்பு அதிகாரி முகமத் தாரிக் தெரிவித்தார்.
கடந்த மாதத்தில் மட்டும் நான்கு முறை இதுபோன்ற அத்துமீறல்கள் நடைபெற்றதாகவும், 26 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தாரிக் மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை... |
| |
|
|
|
|
|
|
|