யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பஹ்ரைனில் இந்தியர்கள் உள்பட 1,300 தொழிலாளர்கள் ஸ்டிரைக்
துபாய் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 10 பிப்ரவரி 2008   ( 15:35 IST )
பஹ்ரைனிலுள்ள கட்டுமான தொழிற்சாலையில் பெரும்பாலான இந்தியர்கள் உள்பட 1,300 பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூரட் அல் பஹ்ரைனில் உள்ள ஜிபி ஸச்சாரைட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது ஊதியத்தை உயர்த்தக் கோரியும், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளைச் செய்து தர வலியுறுத்தியும் இப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளவர்கள், இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களாவர்.

தங்களது உழைப்பக் கொண்டு அதிக லாபத்தை ஈட்டும் நிறுவனம், தங்களுக்கு குறைந்தபட்சமாக 57 பஹ்ரைன் தினார் அளவில் மட்டுமே ஊதியமாக வழங்கி வருகிறது என்றும், இந்த ஊதியத்தை உயர்த்தும் வரையில் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளன.

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 100 தினார்கள் என நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய தூதர் பாலகிருஷணா ஷெட்டி நேற்று அறிவித்த நிலையில், இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்
புலிகள் தாக்குதலில் ராணுவ‌த்‌தின‌ர் 21 பேர் ப‌லி
ஈராக்கில் குண்டு வெடிப்பில் 5 அமெரிக்க வீரர்கள் பலி
கடன் பிரச்சனை : ஜி 8 நாடுகளின் நிதியமைச்சர்கள் ஆலோசனை
' பத்திரிகையாளர்களு‌க்கு ஆப‌த்தான நாடு இலங்கை '
ஸ்காட்லாந்து போலீஸ் அறிக்கை: பெனாசிர் கட்சி ஏற்க மறுப்பு
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகை உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர்களில்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பீமா
தாதாக்களின் தளபதிகளுக்கு வரும் வாழ்க்கை குழப்பங்களும், மாறுதல்களும் விக்ரமுக்கும் வருகிறது. அவற்றை எப்படி...
பிடிச்சிருக்கு
பிரிவோம் சந்திப்போம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'உடலை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே' என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன 'பற்களைக் காத்தேன்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace