|
| ஈராக்கில் குண்டு வெடிப்பில் 5 அமெரிக்க வீரர்கள் பலி |
| பாக்தாத் (ஏஜென்சி), சனிக்கிழமை, 9 பிப்ரவரி 2008 ( 17:12 IST ) | |
ஈராக்கில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நிகழந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் அமெரிக்க வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.
தலைநகர் பாக்தாத்திலும், தமிம் மாகாணத்திலும் சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததில் அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வீரர்கள் 5 பேர் உடல் சிதறி பலியானதாக அமெரிக்க ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதில் பாக்தாத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 4 அமெரிக்க வீரர்களும், தமிம் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒரு அமெரிக்க வீரரும் பலியானதாகவும், 3 வீரர்கள் காயமடைந்ததாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
கடந்த 2003 ம் ஆண்டு மார்ச் மாதம் ஈராக் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 3,958 அமெரிக்க வீரர்கள் பலியாகி இருப்பதாக செய்தி ஏஜென்சி ஒன்று தெரிவிக்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகை உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர்களில்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பீமா | | தாதாக்களின் தளபதிகளுக்கு வரும் வாழ்க்கை குழப்பங்களும், மாறுதல்களும் விக்ரமுக்கும் வருகிறது. அவற்றை எப்படி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'உடலை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே' என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன 'பற்களைக் காத்தேன்... |
| |
|
|
|
|
|
|
|