|
| யு.எஸ். அதிபர் வேட்பாளர் : ஃப்ளோரிடாவில் மெக்கெய்ன் வெற்றி |
| மியாமி (ஏஜென்சி), 30 ஜனவரி 2008 ( 10:29 IST ) | |
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான குடியரசு கட்சி வேட்பாளர் தேர்வில் ஜான் மெக்கெய்ன், ஃப்ளோரிடா மாகாணத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இவர், தன்னை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் கவர்னர் மிட் ரூம்னியை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் குடியரசு கட்சியினரின் ஆதரவு, மெக்கெய்னுக்கு வெகுவாக இருப்பது உறுதியாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாகாணத் தேர்தலில் தாம் வெற்றி பெற்றிருப்பது, கட்சியை ஒருங்கிணைக்கும் வல்லமை தமக்கு மட்டுமே உண்டு என்பதைக் காட்டுவதாக மெக்கெய்ன் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, அடுத்து வரும் வாரங்களில் 20-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் நடைபெறவுள்ள போட்டியில் வெற்றி பெறுவதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட அவர் திட்டமிட்டுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகைக்கு, ரசிகரால் கோவில் கட்டப்பட்டது என்றால், அந்தப் பெருமைக்கு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பிரிவோம் சந்திப்போம் | | அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகிக்கும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு... |
| |
|
|
|
|
|
|
|