|
| சென்செக்ஸ் 241 நிஃப்டி 48 புள்ளி சரிவு
|
| மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009 ( 17:31 IST ) | |
மும்பை தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறைந்த குறியீட்டு எண்கள், சிறிது நேரத்திற்கு பிறகு அதிகரித்தன. ஆனால் அதிக மாற்றத்துடன் இருந்தது. நண்பகல் 12 மணிக்கு பிறகு, நேற்றைய மாலை நிலவரத்தைவிட சரிந்தது. நாள் முழுவதும் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 241.37 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 14,060.66 ஆக குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 48.15 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 4,270.30 ஆக குறைந்தது.
ஆனால் மிட் கேப் 265.95, சுமால் கேப் 424.04, பி.எஸ்.இ 500-37.14 புள்ளிகள் அதிகரித்தன.
இன்றைய வர்த்தகத்தில் வங்கி, பெட்ரோலிய நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்பம், நுகர்வோர் பொருட்கள், தொழில் நுட்பம் பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன. மற்ற பிரிவு அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 2393 பங்குகளின் விலை அதிகரித்தது. 298 பங்குகளின் விலை குறைந்தது. 44 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|