|
| பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் |
மும்பை,தேசிய பங்குச் சந்தைகளில், கடந்த இரண்டு நாட்களாக இருந்த நிலை, இன்று மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று கணிசமான அளவு பங்குகளை வாங்கியுள்ளன. இவை இன்று விற்பனை செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. நேற்று தேசிய பங்குச் சந்தையில் ரொக்க வர்த்தகத்தில் ரூ.40,151 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன. அதே போல் முன்பேர சந்தையிலும் ரூ.1,05,985 கோடி வர்த்தகம் நடந்துள்ளது.
இன்று பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போதே, சென்செக்ஸ், நிப்டி குறைந்தது. சென்செக்ஸ் 72 புள்ளிகளும், நிஃப்டி 61 புள்ளிகளும் குறைந்தது. ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அதிகரித்தது.
பங்குச் சந்தைகளில் இன்று அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், பங்குகளை விற்பனை செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. இன்றும் நேற்று போலவே, அடிக்கடி மாற்றம் இருக்கும்.
ஆசியாவில் இன்று ஹாங்காங், சீனா தவிர எல்லா நாட்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.
தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 03.78, தைவான் வெயிட் 34.02, ஜப்பானின் நிக்கி 57.79 புள்ளிகள் அதிகரித்தது.
ஹாங்காங்கின் ஹாங்செங் 55.06, சீனாவின் சாங்காய் காம்போசிட் 03.07 புள்ளிகள் குறைந்தது.
ஐரோப்பிய நாடுகளில் நேற்று எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 35.80 புள்ளிகள் அதிகரித்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 29.23, எஸ்& பி 500-01.58 புள்ளிகள் குறைந்தது. ஆனால் எஸ்& பி 500-01.58 புள்ளிகள் அதிகரித்தது.
காலை 10.31 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 02 (NSE-nifty) புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 4,316.45 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 54.65 (BSE-sensex) புள்ளிகள் குறைந்து. குறியீட்டு எண் 14,247.38 ஆக குறைந்தது.
ஆனால் மிட் கேப் 115.54, சுமால் கேப் 188.85, பி.எஸ்.இ 500-46.22 புள்ளிகள் அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.24 மணியளவில் 1,448 பங்குகளின் விலை அதிகரித்தும், 315 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 41 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நிகரமாக ரூ.4,792.56 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் நிகரமாக ரூ.1,964.19 கோடி மதிப்புள்ள விற்பனை செய்துள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|