|
| சென்செக்ஸ் 18 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு |
| மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 மே 2009 ( 18:58 IST ) | |
சென்செக்ஸ் 18 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று சென்செக்ஸ், 2,100 புள்ளிகள் வரை உயர்ந்து 14,272 ஐ தொட்டதன் காரணமாக நாள் முழுவதும் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. '
இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 14,757 ஆக காணப்பட்டது.ஆனால் இந்த் உயர்வு தொடர்ந்து நீடிக்காத நிலையில், காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 81 புள்ளிகள் உயர்வுடன் 14,365 ஆக காணப்பட்டது.
லார்சன் அண்ட் டூப்ரோ 9.5 % , மகிந்த்ரா அண்ட் மகிந்த்ரா 9 %, மாருதி சுஸுகி மற்றும் எஸ்பிஐ 7.5 % உயர்ந்து காணப்பட்டன.
அதேபோன்று சன் பார்மா, ஹெச்டிஎப்சி, கிராஸிம், ஐசிஐசிஐ வங்கி மற்றும் டிஎல்எப் ஆகியவை தலா 5 % உயர்ந்து காணப்பட்டன.ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 3.5 %, ஏசிசி, ஓஎன்ஜிசி,ஸ்டெர்லைட் மற்றும் பெல் ஆகியவற்றின் பங்கு மதிப்புகளும் உயர்ந்து காணப்பட்டன.
அதே சமயம் இன்ஃபோசிஸ் 9 %, விப்ரோ மற்றும் டிசிஎஸ் ஆகியவை தலா 7 %, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், இந்துஸ்தான் யுனிலீவர்,ரான்பாக்ஸி, என்டிபிசி, ஹிண்டல்கோ, ஐடிசி, டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஆகியவை 2 முதல் 4 % வரை சரிந்து காணப்பட்டன.
இதனையடுத்து மதியம் ரியல் எஸ்டேட் மற்றும் வங்கிகளின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கியதால் சரிந்த சென்செக்ஸ் மீண்டும் உயர்ந்து, 14,930 ஐ தொட்டது.
இந்நிலையில், மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 18 புள்ளிகள் உயர்வுடன் 14,302 ல் நிலைகொண்டது.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 5 புள்ளிகள் சரிவுடன் 4,318 ல் நிலைகொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|