|
| சென்செக்ஸ் 14,000 புள்ளிகளை கடந்தது ; வர்த்தகம் நிறுத்தம் |
| மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 மே 2009 ( 15:51 IST ) | |
மத்தியில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நிலையான ஆட்சியமையும் என்ற நம்பிக்கை காரணமாக முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியதால், மும்பை பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் 14,000 புள்ளிகளை கடந்ததால், நாள் முழுவதும் வர்ததகம் நிறுத்தப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 301 புள்ளிகள் ஆதாயத்துடன் 12,173 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த சனிக்கிழமையன்று வெளியாகி, மத்தியில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நிலையான ஆட்சியமையும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டதன் காரணமாக, மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போதே, சமீப காலமாக இல்லாத வகையில் சென்செக்ஸ் புள்ளிகள் 1,306 புள்ளிகள் உயர்வுடன் 13,479 ஆக காண்ப்பட்டது.
இது முந்தைய கடைசி வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் 10.7 சதவீத உயர்வாகும்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 20 %, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்டரக்சர் 19.5 %, லார்சன் அண்ட் டூப்ரோ 19 %, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 18 %, ஐசிஐசிஐ வங்கி 17.5 %, பெல், டிஎல்எப், ஸ்டெர்லைட் மற்றும் ஹிண்டல்கோ ஆகியவை தலா 15 முதல் 17 சதவீதம் வரை அதிகரித்து காணப்பட்டது.
மேலும் பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி,டிசிஎஸ்,ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, டாடா பவர் மற்றும் ஏசிசி ஆகியவை தலா 10 முதல் 15 % வரை உயர்ந்து காணப்பட்டன.
சென்செக்ஸ் புள்ளிகளின் இந்த அபார உயர்வு காரணமாக ஒரு மணி நேரத்திற்கு வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில்,11.55 மணிக்கு மீண்டும் வர்த்தகம் தொடங்கியதும், தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்ற சென்செக்ஸ், 2,100 புள்ளிகள் வரை உயர்ந்து 14,272 ஐ தொட்டது.
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு காணப்பட்ட இந்த திடீர் உயர்வு காரணமாக மும்பை பங்குச் சந்தையில் இன்று நாள் முழுவதும் வர்த்தகம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 712 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|