யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் புள்ளிகள் அபார உயர்வு
மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 மே 2009   ( 11:38 IST )
மத்தியில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நிலையான ஆட்சியமையும் என்ற நம்பிக்கை காரணமாக மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போதே சென்செக்ஸ் 1,306 புள்ளிகள் உயர்வுடன் காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 301 புள்ளிகள் ஆதாயத்துடன் 12,173 ல் நிலைகொண்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த சனிக்கிழமையன்று வெளியாகி, மத்தியில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நிலையான ஆட்சியமையும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டதன் காரணமாக, மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போதே, சமீப காலமாக இல்லாத வகையில் சென்செக்ஸ் புள்ளிகள் 1,306 புள்ளிகள் உயர்வுடன் 13,479 ஆக காண்ப்பட்டது.

இது முந்தைய கடைசி வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் 10.7 சதவீத உயர்வாகும்.இந்த அபார உயர்வு காரணமாக அடுத்த ஒரு மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 20 %, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்டரக்சர் 19.5 %, லார்சன் அண்ட் டூப்ரோ 19 %, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 18 %, ஐசிஐசிஐ வங்கி 17.5 %, பெல், டிஎல்எப், ஸ்டெர்லைட் மற்றும் ஹிண்டல்கோ ஆகியவை தலா 15 முதல் 17 சதவீதம் வரை அதிகரித்து காணப்பட்டது.

மேலும் பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி,டிசிஎஸ்,ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, டாடா பவர் மற்றும் ஏசிசி ஆகியவை தலா 10 முதல் 15 % வரை உயர்ந்து காணப்பட்டன.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 532 புள்ளிகள் உயர்ந்து 4,203 ஆக காணப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 301 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 31 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 175 புள்ளிகள் உயர்வு
பங்குச்சந்தை சரிவு
பணவீக்கம் குறைந்தது!
சென்செக்ஸ் 138 புள்ளிகள் புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளதற்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வரவேற்பு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...