|
| சென்செக்ஸ் 301 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு |
| மும்பை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 15 மே 2009 ( 17:53 IST ) | |
சென்செக்ஸ் 301 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 75 புள்ளிகள் உயர்வுடன் 11,950 ஆக காணப்பட்டது.
அடுத்த சில நிமிடங்களில் 131 புள்ளிகள் உயர்வுடன் 12,004 ஆக காணப்பட்ட சென்செக்ஸ், பின்னர் காலை 10.10 மணியளவில் 175 புள்ளிகள் உயர்வுடன் 12,047 ஆக காணப்பட்டது.
ஐசிஐசிஐ வங்கி 3.5 %, டாடா ஸ்டீல் மற்றும் ஸ்டெர்லைட் 3 %, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ, டிஎல்எப் மற்றும் ஏசிசி ஆகியவை தலா 2.5 % உயர்ந்து காணப்பட்டன.
மேலும் டிசிஎஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் பெல் ஆகியவை தலா 2 % உயர்ந்து காணப்பட்டன.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் காணப்பட்ட முன்னேற்றம் மும்பை பங்குச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், சென்செகஸ் புள்ளிகள் தொடர்ந்து அதிகரித்தது.
இதனால் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 347 புள்ளிகள் உயர்வுடன் 12,220 ஐ தொட்டு, மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 301 புள்ளிகள் ஆதாயத்துடன் 12,173 ல் நிலைகொண்டது.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 78 புள்ளிகள் உயர்வுடன் 3,672 ல் நிலைகொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளதற்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வரவேற்பு... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|