|
| பங்குச்சந்தை சரிவு |
மும்பை,தேசிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் ஆரம்பிக்கும் போது குறியீட்டு எண்கள் சரிந்தன. சென்செக்ஸ் 2.5% குறைந்தது.
மக்களவை தேர்தலின் இறுதி கட்ட வாக்கு பதிவு நேற்று முடிவடைந்தது. ஊடகங்களின் கணிப்பு படி, காங்கிரஸ் அல்லது பாஜ பெரும்பான்மை பெறாது என்று தெரிய வந்துள்ளது. அரசியல் அரங்கில் நிலையற்ற தன்மை நிலவுவதால், பங்குச் சந்தையிலும் முதலீசு செய்வதில் தயக்கம் உள்ளது.
நேற்று உள்நாட்டு, அந்நிய நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மட்டுமே பங்குகளை வாங்கியுள்ளனர். சிறு முதலீட்டாளர்கள், ஷேர் புரோக்கர்கள் உட்பட எல்லா தரப்பினரும் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
இந்த வருடத்தில் இதுவரை இல்லாத அளவு அந்நிய நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ஒரே நாளில் ரூ.4,106.96 மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்க ஆரம்பித்தால், குறியீட்டு எண்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 46.50 (NSE-nifty) புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 3,588.75 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 182.98 (BSE-sensex) புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 11,836.67 ஆக குறைந்தது.
மிட் கேப் 20.44, சுமால் கேப் 22.32, பி.எஸ்.இ 500-48.94 புள்ளிகள் குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.31 மணியளவில் 499 பங்குகளின் விலை அதிகரித்தும், 1044 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 32 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|