|
| பணவீக்கம் குறைந்தது!
|
| புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 14 மே 2009 ( 15:48 IST ) | |
கடந்த முன்று வாரங்களாக அதிகரித்து வந்த பணவீக்கம் குறைந்தது. மே 2 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 0.48 விழுக்காடாக குறைந்துள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 0.70 விழுக்காடாக இருந்தது.
அதே நேரத்தில் மே 2 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பருப்பு, சிறு தானியங்கள், காய்கறி, பழங்கள் தேயிலை, மாசலா பொருட்கள் விலை அதிகரித்துள்ளது.
இதில் தேயிலை விலை 2%, ராகி விலை 17%, சோளம், பழங்கள், காய்கறிகள், உளுந்து விலை தலா 1% அதிகரித்துள்ளது.
ரப்பர், சூரியகாந்தி விதை தலா 6%, உல்லன் 24%, பருத்தி 2%, கொப்பரை தேங்காய் 1% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பட்டு விலை 2%, புகையிலை விலை 1% குறைந்துள்ளது.
எரி எண்ணெய், நாப்தா விலை தலா 3%, இலகு ரக டீசல் விலை 1% அதிகரித்துள்ளது.
தார், விமான பெட்ரோல் விலை தலா 1% குறைந்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலை 4%, சர்க்கரை விலை 3% அதிகரித்துள்ளது.
ஆனால் கடலை எண்ணெய், தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய், வெல்லம் விலை தலா 1% குறைந்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|