|
| சென்செக்ஸ் 138 புள்ளிகள் புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு |
| மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 13 மே 2009 ( 19:07 IST ) | |
சென்செக்ஸ் 138 புள்ளிகள் புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 475 புள்ளிகள் ஆதாயத்துடன் 12,158 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது சென்செக்ஸ் 43 புள்ளிகள் உயர்வுடன் 12, 201 ஆக காணப்பட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே 81 புள்ளிகள் சரிந்து 12,077 ஆக காணப்பட்ட சென்செக்ஸ், பின்னர் ஓரளவு மீண்டது.
இந்நிலையில், காலை 11 மணியளவில் 12 புள்ளிகள் சரிவுடன் 12,145 ஆக காணப்பட்டது.
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் 4 %, டிஎல்எப் 7 %, ஹெச்டிஎப்சி 4 %, ஏசிசி மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்டரக்சர் ஆகியவை தலா 3 % உயர்ந்து காணப்பட்டன.
ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் மற்றும் கிராஸிம் ஆகியவை தலா 2 % உயர்ந்து காணப்பட்டன.
அதே சமயம் ஸ்டெர்லைட் மற்றும் ஹெச்டிஎப்சி ஆகியவை தலா 2 % சரிந்து காணப்பட்டன.
இந்நிலையில், இன்றுடன் ஐந்தாவது கட்டத்தேர்தல் முடிவடைவதால் தேர்தல் முடிவுகள் எப்படி அமையுமோ என்ற பயத்தில் முதலீட்டாளர்கள் ஓரளவு லாபம் தரக்கூடிய சில குறிப்பிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்குகளை விற்றதால், சென்செக்ஸ் புள்ளிகள் மேலும் சரிந்தது.
இந்நிலையில், மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 138 புள்ளிகள் இழப்புடன் 12,020 ல் நிலைகொண்டது.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 46 புள்ளிகள் சரிந்து 3,635 ல் நிலைகொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|