|
| சென்செக்ஸ் 12 புள்ளிகள் சரிவு |
| மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 13 மே 2009 ( 12:34 IST ) | |
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 11 மணியளவில் 12 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 475 புள்ளிகள் ஆதாயத்துடன் 12,158 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது சென்செக்ஸ் 43 புள்ளிகள் உயர்வுடன் 12, 201 ஆக காணப்பட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே 81 புள்ளிகள் சரிந்து 12,077 ஆக காணப்பட்ட சென்செக்ஸ், பின்னர் ஓரளவு மீண்டது.
இந்நிலையில், காலை 11 மணியளவில் 12 புள்ளிகள் சரிவுடன் 12,145 ஆக காணப்பட்டது.
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் 4 %, டிஎல்எப் 7 %, ஹெச்டிஎப்சி 4 %, ஏசிசி மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்டரக்சர் ஆகியவை தலா 3 % உயர்ந்து காணப்பட்டன.
ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் மற்றும் கிராஸிம் ஆகியவை தலா 2 % உயர்ந்து காணப்பட்டன.
அதே சமயம் ஸ்டெர்லைட் மற்றும் ஹெச்டிஎப்சி ஆகியவை தலா 2 % சரிந்து காணப்பட்டன.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையி நிஃப்டி 14 புள்ளிகள் சரிந்து 3,667 ல் நிலைகொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - காங்கிரஸ் கட்சியை தீண்டத்தகாத கட்சியாக இடதுசாரிகள் கருதவில்லை என்று மேற்கு வங்க முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியுள்ளார்... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|