|
| சென்செக்ஸ் 475 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு |
| மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 12 மே 2009 ( 18:30 IST ) | |
சென்செக்ஸ் 475 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 193 புள்ளிகள் சரிவுடன் 11,683 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 53 புள்ளிகள் சரிவுடன் 11,630 ஆக காணப்பட்டது.
அடுத்த ஐந்து நிமிடத்தில் அது 57 புள்ளிகள் சரிவுடன் 11,625 ஆக காணப்பட்டது.தொடர்ந்து ஆதாயம் தரும் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் விற்றதால், சென்செக்ஸ் புள்ளிகள் மளமளவென சரிந்தது.
அதன் பின்னர் முன்னேற்றம் ஏற்பட்டு, காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 44 புள்ளிகள் உயர்வுடன் 11,727 ஆக காணப்பட்டது.
டாடா ஸ்டீல் 3 %, ஏசிசி 2.5 %, டாடா மோட்டார்ஸ் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ ஆகியவை தலா 2 % சரிந்து காணப்பட்டன.
அதே சமயம் இன்ஃபோசிஸ் 3 %, விப்ரோ 2.5 %, ஐடிசி 2 % உயர்ந்து காணப்பட்டன.
இந்நிலையில், மாலையில் வர்த்தகம் நிறைவடைவதற்கு முன்னதாக கடைசி நேரத்தில் முன்னணி நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கியதால், சென்செக்ஸ் புள்ளிகள் வேகமாக உயர்ந்தது.
இந்நிலையில், மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 475 புள்ளிகள் ஆதாயத்துடன் 12,158 ல் நிலைகொண்டது.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 127 புள்ளிகள் உயர்வுடன் 3,681 ல் நிலைகொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - காங்கிரஸ் கட்சியை தீண்டத்தகாத கட்சியாக இடதுசாரிகள் கருதவில்லை என்று மேற்கு வங்க முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியுள்ளார்... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|