|
| சென்செக்ஸ் 124 புள்ளிகள் சரிவு |
| மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 ஜனவரி 2009 ( 10:58 IST ) | |
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 124 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 180 புள்ளிகள் இழப்புடன் 9,406 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது 90 புள்ளிகள் சரிவுடன் 9,316 ஆக காணப்பட்டது.பின்னர் 9,331 ஆக உயர்ந்த சென்செக்ஸ் மீண்டும் சரிந்து, காலை 10 மணியளவில் 124 புள்ளிகள் வீழ்ச்சியுடன் 9,282 ஆக காணப்பட்டது.
விப்ரோ 6 %, டிஎல்எப் 4.5 %, பெல், ஹெச்டிஎப்சி மற்றும் டிசிஎஸ் ஆகியவை தலா 3 % சரிந்து காணப்பட்டன.
அதேபோன்று ரிலையன்ஸ் இன்ஃப்ராக்ஸ்டரக்சர் 2.7 % , என்டிபிசி, மாருதி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை தலா 2 % சரிந்து காணப்பட்டன.
அதே சமயம் ஜெய்பிரகாஷ் அசோசோயேட்ஸ் 2.3 %, டாடா மோட்டார்ஸ் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகியவை தலா 1.5 % சரிந்து காணப்பட்டன.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 57 புள்ளிகள் சரிந்து 2,816 ஆக காணப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு.... |
| |
|
|
|
|
|
|
|