யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 292 புள்ளிகள் சரிவு
மும்பை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2009   ( 12:22 IST )
மும்பை பங்குச் சந்தையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சென்செக்ஸ் 292 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த புதன்கிழமையன்று ( நேற்று விடுமுறை ) மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 749 புள்ளிகள் இழப்புடன் 9,587 ல் நிலைகொண்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 153 புள்ளிகள் சரிவுடன் 9,434 ஆக காணப்பட்டது.அதன் பின்னர் 9,352 ஆக சரிந்த சென்செக்ஸ், உயர்வை நோக்கி சென்று 9,630 ஐ தொட்டது. ஆனால் பின்னர் சென்செக்ஸ் மீண்டும் சரிந்து ,முற்பகல் 11.30 மணியளவில் 292 புள்ளிகள் சரிந்து 9,295 ஆக காணப்பட்டது.

டிசிஎஸ் 5 %, இன்ஃபோசிஸ் 4 %, இந்துஸ்தான் யுனிலீவர் 3 %, ஹெச்டிஎப்சி மற்றும் ஐடிசி ஆகியவை தலா 2 % உயர்ந்து காணப்பட்டன.

சத்யம் 52 %, டிஎல்எப் 27.3 %, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 14.5 % , ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் 12 %, லார்சன் அண்ட் டூப்ரோ 10.5 % சரிந்து காணப்பட்டன.

மேலும் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 9 % , ரிலையன்ஸ் 8.5 % சரிந்து காணப்பட்டன.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 97 புள்ளிகள் சரிந்து 2,823 ஆக காணப்பட்டது.



(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சத்யம் மோசடி : விசாரணை நடத்த 'செபி' ஐதராபாத் வருகை
மும்பை பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை
சென்செக்ஸ் 749 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 27 காசுகள் உயர்வு
சத்யம் தலைவர் ராஜினாமா ; பங்குச் சந்தையில் கடும் சரிவு
'சத்யம்' நிறுவன தலைவர் ராமலிங்க ராஜூ ராஜினாமா!
செய்திகள்
வணிகம் செய்திகள் - நிதி மோசடியை ஒப்புக்கொண்டு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்...
மேலும் படிக்க|மேலும்...