|
| சத்யம் மோசடி : விசாரணை நடத்த 'செபி' ஐதராபாத் வருகை |
| வியாழக்கிழமை, 8 ஜனவரி 2009 ( 17:01 IST ) | |
சத்யம் நிறுவனத்தின் மோசடி தொடர்பாக விசாரிப்பதற்காக 'செபி' அமைப்பைச் சேர்ந்த குழு ஒன்று ஐதராபாத் வந்துள்ளது.
பல்வேறு முறைகேடுகள் மற்றும் நிதி மோசடியைத் தொடர்ந்து சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ராமலிங்க ராஜூ நேற்று பதவி விலகினார்.மேலும் நிதி மோசடியையும் அவர் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து சத்யம் நிறுவனத்தின் பங்குகளை தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியிலிருந்து நீக்குவதாக 'செபி'நேற்று அறிவித்தது.இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சத்யம் நிறுவனத்தின் மோசடி குறித்து விசாரிப்பதற்காக 'செபி'யைச் சேர்ந்த குழு ஒன்று ஐதராபாத் வந்துள்ளது.
இந்நிலையில்,சத்யம் பங்குகள் இன்னும் சென்செக்ஸிலிருந்து நீக்கப்படவில்லை.இருப்பினும் அது குறித்த அறிவிப்பும் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே சிஎன்எக்ஸ் 500 பட்டியலில் இருந்தும் சத்யம் நீக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அமெரிக்க பங்குச் சந்தையிலிருந்தும் சத்யம் வெளியேற்றப்பட்டுவிட்டது.அங்கு சத்யம் பங்குகளின் விலை ஒரு டாலருக்கும் கீழ் குறைந்துவிட்டன.
இதற்கிடையே, சத்யம் நிறுவனத்தின் வைப்புப் பத்திரங்களை வாங்கி ஏமாந்ததவர்கள் சார்பாக, அமெரிக்க நிறுவனம் ஒன்று நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இதில் நேரில் ஆஜராக வேண்டும் ராஜுவுக்கு நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கில் ஆஜராக அமெரிக்கா சென்றுவிட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.ஆனால் அவரது சார்பில் வேறு ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.டெக்ஸாஸிலும் இதேபோல இன்னொரு வழக்கு சத்யம் நிறுவனத்தின் மீது தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜூ தற்போது தலைமறைவாக உள்ளார் என்றும், அவர் துபாய் சென்றிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியான நிலையில், அவர் ஐதராபாத்தில்தான் உள்ளார் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில் சத்யம் மோசடியால் இந்தியாவின் இதர அவுட்சோர்ஸிங் பணியில் ஈடுபட்டுள்ள மென்பொருள் நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்தும் சில வெளிநாட்டு நிறுவனங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|