|
| சென்செக்ஸ் 749 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு |
| மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 7 ஜனவரி 2009 ( 17:54 IST ) | |
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தலைவரின் ராஜினாமா காரணமாக இன்று கடும் சரிவைச் சந்தித்த மும்பை பங்குச் சந்தையில், இன்று மாலை சென்செக்ஸ் 749 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்வுடன் 10,336 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து சரிந்து காணப்பட்ட சென்செக்ஸ், முற்பகல் 11.10 மணியளவில் 145 புள்ளிகள் சரிந்து 10,191 ஆக காணப்பட்டது.
சத்யம் 25 %, ஸ்டெர்லைட் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை தலா 3.5 % சரிந்து காணப்பட்டன.ஹிண்டல்கோ, மாருதி மற்றும் கிராஸிம் ஆகியவை தலா 2 % சரிந்து காணப்பட்டன.விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை தலா 1.7 % சரிந்து காணப்பட்டன.
டிஎல்எப் 4 % , எஸ்பிஐ 2.5 % , டிசிஎஸ், ஏசிசி மற்றும் ரிலையன்ஸ் ஆகியவை தலா 1.5 % சரிந்து காணப்பட்டன.அதே போன்று ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை தலா 1 % சரிந்து காணப்பட்டன.
இந்நிலையில், சத்யம் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்ததன் காரணமாக சத்யம் முதலீட்டாளர்கள் தங்கள்வசம் இருந்த பங்குகளை அதிக அளவில் விற்றதால், சத்யம் பங்குகள் மளமளவென சரிந்தது.
இதன் காரணமாக பகல் 12.30 மணியளவில் சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்து 9,700 ஆக வீழ்ச்சியடைந்தது.தொடர்ந்து இந்த சரிவு நீடித்த நிலையில், மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 749 புள்ளிகள் இழப்புடன் 9,587 ல் நிலைகொண்டது.
அதேபோன்று தேசியப் பங்குச் சந்தையிலும் நிஃப்டி 192 புள்ளிகள் சரிந்து 2,920 ல் நிலைகொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|