|
| 'சத்யம்' நிறுவன தலைவர் ராமலிங்க ராஜூ ராஜினாமா! |
| ஐதராபாத் (ஏஜென்சி ), புதன்கிழமை, 7 ஜனவரி 2009 ( 13:24 IST ) | |
நிதி மோசடியை ஒப்புக்கொண்டு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 1991ம் ஆண்டு முதல் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் சீனிவாசன்.
மேடாஸ் நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்துள்ள சத்யம் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ, அண்மையில் அந்த நிறுவனத்தை சத்யம் நிறுவனத்துடன் இணைக்க முடிவு செய்தார். மேடாஸ் முழுக்க முழுக்க ராஜூவின் மகன் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனமாகும்.
தனது சுயநலத்துக்காக ராஜூ இந்த முடிவை எடுத்திருப்பதாக முதலீட்டாளர்கள் போர்க்கொடி உயர்த்தியதால், சத்யம் பங்குகள் விலை ஒரே நாளில் 35 சதவிகிதம் குறைந்தன. சத்யம் நிறுவனச் சந்தை மதிப்பும் குறைந்தது.
மேலும் உலக வங்கியின் கணிப்பொறி செயல்பாடுகளை சென்னையிலிருந்து நிர்வகித்து வந்த சத்யம் நிறுவனத்தை சேர்ந்த சிலர் ஒரு மென்பொருளை வாஷிங்டனில் உள்ள உலக வங்கியின் ஒரு கணிப்பொறியில் நிறுவி, உலக வங்கியின் தகவல்களைக் கடத்தியதாக புகார் எழுந்தது.
மேலும் உலக வங்கி தொடர்பான ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும், சத்யம் நிறுவனத்தைச் சேர்ந்த தனிப்பட்ட சிலர் இதன் மூலம் ஆதாயமடைந்துள்ளதாகவும் உலக வங்கி புகார் கூறியது. இதனால் சத்யம் நிறுவனத்துக்கு உலக வங்கி 8 ஆண்டு காலம் தடை விதிப்பதாக அறிவித்தது.
இதனால் சத்யம் நிறுவனத்தில் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக, பங்குச் சந்தையில் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் சரிய ஆரம்பித்தன. இதனால், சத்யம் நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கும் கடும் இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சத்யம் நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து ராமலிங்க ராஜூ விலகியுள்ளார். மேலும் இதுவரை சத்யம் நிறுவனத்திடம் கையிருப்பாக இருப்பதாகக் கூறப்பட்ட ரூ. 5,040 கோடி உண்மையில் கையிருப்பில் இல்லை என்றும், அது நிறுவனத்தின் கணக்கில் திரித்துக் காட்டப்பட்ட பணம் என்றும் ராமலிங்க ராஜு ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து பங்குச் சந்தைக்கு ராஜூ அனுப்பியுள்ள கடிதத்தில், 'தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்காக நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் வருத்தம் தெரிவிக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
சத்யம் நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட் குறித்த விபரங்களை தெரிவித்துள்ளார்.
ராமலிங்க ராஜூ தனது ராஜினாமா குறித்து யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரது ராஜினாமா காரணமாக, மும்பை பங்குச் சந்தையில் அந்நிறுவனத்தின் மதிப்பு மிகவும் சரிந்து காணப்படுகிறது.
இன்று காலை 11.22 மணி நிலவரப்படி, சத்யம் நிறுவனப் பங்குகளின் மதிப்பு 16.81 சதவீதம் சரிந்து, ரூ.149 ஆக உள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|