யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
மும்பை (ஏஜெனசி), செவ்வாய்கிழமை, 6 ஜனவரி 2009   ( 19:00 IST )
சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 334 புள்ளிகள் உயர்வுடன் 10,276 ல் நிலைகொண்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 18 புள்ளிகள் சரிவுடன் 10,258 ஆக காணப்பட்டது.தொடர்ந்து சரிவை சந்தித்த சென்செக்ஸ் 10,230 புள்ளிகள் அளவிற்கு வீழ்ச்சியடைந்து, பின்னர் 10,339 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயர்ந்து 10,290 ஆக காணப்பட்டது.

சத்யம் மற்றும் மகிந்த்ரா அண்ட் மகிந்த்ரா ஆகியவை தலா 4.5 % உயர்ந்து காணப்பட்டன.கிராஸிம், ஸ்டெர்லைட் ஆகியவை தலா 4.3 % உயர்ந்து காணப்பட்டன.

ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை தலா 2.5 % உயர்ந்து காணப்பட்டன.டாடா மோட்டார்ஸ் மற்றும் ஏசிசி ஆகியவை தலா 2 % உயர்ந்து காணப்பட்டன.

ஹிண்டல்கோ, பெல் மற்றும் ரான்பாக்ஸி ஆகியவை தலா 2 % உயர்ந்து காணப்பட்டன.

அதே சமயம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 2.8 %, டாடா பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃபராஸ்டரக்சர் ஆகியவை தலா 1.5 % சரிந்து காணப்பட்டன.லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் என்டிபிசி ஆகியவை தலா 1.3 % சரிந்து காணப்பட்டன.

இந்நிலையில், மதியத்திற்கு பின்னர் ஆதாயம் தரும் பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டதால், சென்செக்ஸ் புள்ளிகளில் மீண்டும் சரிவு ஏற்பட்டது.இந்த ஏற்ற இறக்கம் காரணமாக, இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 10,386 ஆக உயர்ந்தும், 10,151 ஆக சரிந்தும் காணப்பட்டன.

இந்நிலையில், மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்வுடன் 10,336 ல் நிலைகொண்டது.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 9 புள்ளிகள் சரிவுடன் 3,113 ல் நிலைகொண்டது.






(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 334 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
காஸா தாக்குதல் : கச்சா எண்ணெய் விலை உயர்வு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 168 புள்ளிகள் உயர்வு
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...