யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 334 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
சென்செக்ஸ் 334 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 67 புள்ளிகள் உயர்வுடன் 9,070ல் நிலைகொண்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 152 புள்ளிகள் உயர்வுடன் 10,110 ஆக காணப்பட்டது. பின்னர் அது முற்பகல் 11.20 மணிக்கு 167 புள்ளிகள் உயர்வுடன் 10,127 ஆக காணப்பட்டது.

ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் மற்றும் ஹிண்டல்கோ ஆகியவை தலா 5 % உயர்ந்து காணப்பட்டன.மேலும் ஐசிஐசிஐ வங்கி மற்றும் டாடா பவர் ஆகியவை தலா 4 % உயர்ந்து காணப்பட்டன.ஸ்டெர்லைட் 3.8 %, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்டரக்சர்,டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை தலா 3 % உயர்ந்து காணப்பட்டன.

விப்ரோ 2.7 %, எஸ்பிஐ , ரிலையன்ஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை தலா 2 % உயர்ந்து காணப்பட்டன.

அதே சமயம் பார்தி ஏர்டெல், சத்யாம் ஆகியவை தலா 3.5 % சரிந்து காணப்பட்டன.இந்துஸ்தான் யுனிலீவர் 1 % சரிந்து காணப்பட்டன.

இந்நிலையில், மதியத்திற்கு பின்னர் எண்ணெய் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் உலோக நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கியதால் சென்செக்ஸ் புள்ளிகளில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 10,276 ல் நிலைகொண்டது.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 75 புள்ளிகள் உயர்வுடன் 3, 121 ல் நிலைகொண்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காஸா தாக்குதல் : கச்சா எண்ணெய் விலை உயர்வு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 168 புள்ளிகள் உயர்வு
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு
10,000ஐ தாண்டியது சென்செக்ஸ்!
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...