யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
காஸா தாக்குதல் : கச்சா எண்ணெய் விலை உயர்வு
சிங்கப்பூர் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009   ( 15:37 IST )
காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக ர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 47 டாலராக அதிகரித்துள்ளது.

காஸா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தியை புறக்கணிக்குமாறு ஈரான் ராணுவ தளபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இதன் எதிரொலியாக பிப்ரவரி மாதம் டெலிவரி செய்யப்பட வேண்டிய கச்சா எண்ணெயின் விலை இன்று 1.47 டாலர் அதிகரித்து 47.81 டாலராக உயர்ந்துள்ளது.

காஸா மீதான தாக்குதல் அதிகரித்தால் வரும் நாட்களில், கச்சா எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 147 டாலராக காணப்பட்ட நிலையில், கடந்த ஒரு சில மாதங்களாக இந்த விலை படிப்படியாக குறைந்து 37 டாலர் வரை வீழ்ச்சியடைந்தது.

இந்நிலையில், கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயரத்தொடங்கியிருப்பது வளரும் நாடுகளை கவலைக் கொள்ளச் செய்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 168 புள்ளிகள் உயர்வு
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு
10,000ஐ தாண்டியது சென்செக்ஸ்!
சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயர்வு
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...