யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு
மும்பை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2009   ( 18:44 IST )
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு உட்பட சில சலுகைகளை இன்று அறிவித்துள்ளது.

இதன்படி வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை அரை சதவீதம் குறைத்துள்ளது. இனி வங்கிகள் திரட்டும் வைப்பு நிதியில் 5 சதவீதம் வரை மட்டும் ரிசர்வ் வங்கியின் இருப்பு கணக்கில் வைத்தால் போதும்.

இதனால் நிதி சந்தையில் ரூ.20 ஆயிரம் கோடி பணப்புழக்கம் அதிகரிக்க வழி ஏற்பட்டுள்ளது. வங்கிகள் கடன் கொடுப்பதற்கு அதிக அளவு பணம் கிடைக்கும்.

இதே போல் ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கடன் (ரிபோ) மீதான வட்டியை 1 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் வங்கிகளுக்கு 5.5 சதவீதம் வட்டியில் கடன் கிடைக்கும்.

வங்கிகள் அவைகளின் உயரி நிதியை, ரிசர்வ் வங்கியில் குறுகிய கால வைப்பு நிதியாக வைக்கின்றன. இது ரிவர்ஸ் ரிபோ என்று அழைக்கப்படுகிறது. இதன் வட்டி விகிதத்தை 5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைத்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
10,000ஐ தாண்டியது சென்செக்ஸ்!
சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 264 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 24 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 69 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
செய்திகள்
தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...