|
| சென்செக்ஸ் 264 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு |
| மும்பை(ஏஜென்சி), வியாழக்கிழமை, 1 ஜனவரி 2009 ( 16:54 IST ) | |
சென்செக்ஸ் 264 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 69 புள்ளிகள் உயர்வுடன் 9,647 ல் நிலைகொண்டது.
இந்நிலையில்,புத்தாண்டு துவக்கம் மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை ஏற்றமுடனேயே தொடங்கியது. காலை வர்த்தகம் தொடங்கியபோது 73 புள்ளிகள் உயர்வுடன் 9,720 ஆக காணப்பட்ட சென்செக்ஸ், முற்பகல் 11.30 மணியளவில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்து 9,748 ஆக காணப்பட்டது.
ஸ்டெர்லைட் 3.7 %, சத்யம் 2.9 %, ஹிண்டல்கோ மற்றும் டாடா ஸ்டீல் 2.9 %, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 2.6 % உயர்ந்து காணப்பட்டன.
அதே சமயம் ரான்பாக்ஸி 1.5 %, மாருதி 0.6 %, பார்தி ஏர்டெல் 0.3 %, மகிந்த்ரா அண்ட் மகிந்த்ரா 0.1 % சரிந்து காணப்பட்டன.
இந்நிலையில், 9,712 க்கும் 9,922 க்குமிடையே ஏறி இறங்கி காணப்பட்ட சென்செக்ஸ், மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது 256 புள்ளிகள் ஆதாயத்துடன் 9,903 ல் நிலைகொண்டது.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 74 புள்ளிகள் உயர்வுடன் 3,033 ல் நிலைகொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|