யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 482 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2008   ( 17:49 IST )
சென்செக்ஸ் 482 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது 8 புள்ளிகள் உயர்வுடன் 8, 747 ல் நிலைகொண்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது 32 புள்ளிகள் உயர்வுடன் 8,779 ஆக காணப்பட்ட சென்செக்ஸ், பின்னர் மேலும் உயர்ந்து 8,817 ஆக அதிகரித்தது.

காலை காலை 10.25 மணியளவில் சென்செக்ஸ் 113 புள்ளிகள் உயர்ந்து 8,860 ஆக இருந்தது.

லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் ஆகியவை தலா 2 % உயர்ந்து காணப்பட்டன.அதேபோன்று எஸ்பிஐ 2 % , டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் டிஎல்எப் ஆகியவை தலா 1.5 % உயர்ந்து காணப்பட்டன.

அதே சமயம் ஹிண்டல்கோ 3.5 %, ஸ்டெர்லைட் ஆகியவை தலா 3 % சரிந்து காணப்பட்டன. மாருதி 1.7 % சரிந்து காணப்பட்டன.

இந்நிலையில், பணவீக்கம் 8.84 சதவீதத்திலிருந்து 8.40 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக முற்பகலில் மத்திய நிதியமைச்சகத்தின் செய்தி குறிப்பு வெளியானதுமே, அதன் தாக்கம் மும்பை பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது.

இதனால் பிற்பகலில் வங்கிகள், எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கியதால் சென்செக்ஸ் புள்ளிகளில் மளமளவென் முன்னேற்றம் காணப்பட்டது.

இந்நிலையில், மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 482 புள்ளிகள் உயர்வுடன் 9,230 ல் நிலைகொண்டது.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 132 புள்ளிகள் உயர்ந்து 2,788 ல் நிலைகொண்டது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பணவீக்கம் 8.40 சதவீதமாக வீழ்ச்சி
கச்சா எண்ணெய் விலை 46 டாலராக வீழ்ச்சி
சென்செக்ஸ் 113 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 8 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு
சென்செக்ஸ் 56 புள்ளிகள் சரிவு
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...