யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 8 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 3 டிசம்பர் 2008   ( 18:16 IST )
சென்செக்ஸ் 8 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 101 புள்ளிகள் இழப்புடன் 8,739 ல் நிலைகொண்டது.

இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 112 புள்ளிகள் உயர்வுடன் 8,851 ஆக காணப்பட்டது.தொடர்ந்து சிறிது நேரம் தொடர்ந்து முன்னேற்றமடைந்து காணப்பட்ட சென்செக்ஸ், பின்னர் சரியத் தொடங்கியது.காலை 11 மணியளவில் 56 புள்ளிகள் சரிந்து 8,683 ஆக காணப்பட்டது.

டாடா ஸ்டீல் 9 %, டாடா மோட்டார்ஸ் 2 %, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஸ்டெர்லைட்ஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை தலா 1.5 % உயர்ந்து காணப்பட்டன.

அதே சமயம் விப்ரோ மற்றும் மகிந்த்ரா அண்ட் மகிந்த்ரா ஆகியவை தலா 3 % சரிந்து காணப்பட்டன.

பார்தி ஏர்டெல், ஹிண்டல்கோ மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை தலா 2.5 % உயர்ந்து காணப்பட்டன.

சத்யம் மற்றும் ஒஎன்ஜிசி ஆகியவை தலா 2 % சரிந்து காணப்பட்டன.

இந்நிலையில், மதியத்திற்கு பின்னர் தொடர்ந்து ஏற்ற இறக்கமுடன் காணப்பட்ட சென்செக்ஸ்,மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது 8 புள்ளிகள் உயர்வுடன் 8, 747 ல் நிலைகொண்டது.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 2 புள்ளிகள் சரிந்து 2,656 ல் நிலைகொண்டது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு
சென்செக்ஸ் 56 புள்ளிகள் சரிவு
சென்செக்ஸ் 101 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
சென்செக்ஸ் 319 புள்ளிகள் சரிவு
சென்செக்ஸ் 253 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
ஸ்திரமான நிலையில் ரூபாய் மதிப்பு
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...